என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சிலைக் கடத்தல்
நீங்கள் தேடியது "சிலைக் கடத்தல்"
ஐ.ஜி பொன் மாணிக்கவேல் இன்று பணி ஓய்வு பெறுவதால் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அபய்குமார் சிங்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #IdolSmuggling #IGPonManickavel #AbhaykumarSingh
சென்னை:
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்து வந்தார். அவருடைய பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் இன்று பணி ஓய்வு பெறுவதால் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அபய்குமார் சிங்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அபய்குமார் சிங் தமிழ்நாடு நிறுவனத்தின் ஊழல் கண்காணிப்பு ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #IdolSmuggling #IGPonManickavel #AbhaykumarSingh
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்து வந்தார். அவருடைய பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
சிலை கடத்தல் தொடர்பான பல வழக்குகளை சிறப்பாக விசாரித்து வருவதால் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.
அபய்குமார் சிங் தமிழ்நாடு நிறுவனத்தின் ஊழல் கண்காணிப்பு ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #IdolSmuggling #IGPonManickavel #AbhaykumarSingh
சிலைக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி தொழிலதிபர் ரன்வீர் ஷா, அவரது நண்பர் கிரண் ராவுக்கு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. #IdolTheftCase #IdolWing #RanvirShah
கும்பகோணம்:
தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தல் தொடர்பாக ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏராளமான சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சென்னையில் தொழில் அதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான வீடு மற்றும் பண்ணை வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, ஏராளமான சிலைகள் மற்றும் தூண்கள் மீட்கப்பட்டன.
இந்த சிலைகள் முறையாக வாங்கப்பட்டதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராகும்படி ரன்வீர் ஷாவுக்கு சிலைக் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். மேலும், அவர் வெளிநாடுகளுக்கு சென்றுவிடாமல் தடுக்கும் வகையில், அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் கும்பகோணத்தில் உள்ள சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நாளை ஆஜராகும்படி ரன்வீர் ஷாவுக்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.
இதற்கிடையே தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் நண்பரான கிரண் ராவ் வீட்டு வளாகத்தில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருக்கு எதிராகவும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரண் ராவின் மேலாளர் தயாநிதி உள்பட 7 பேருக்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நாளை ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #IdolTheftCase #IdolWing #RanvirShah
தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தல் தொடர்பாக ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏராளமான சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சென்னையில் தொழில் அதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான வீடு மற்றும் பண்ணை வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, ஏராளமான சிலைகள் மற்றும் தூண்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில் கும்பகோணத்தில் உள்ள சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நாளை ஆஜராகும்படி ரன்வீர் ஷாவுக்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.
இதற்கிடையே தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் நண்பரான கிரண் ராவ் வீட்டு வளாகத்தில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருக்கு எதிராகவும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரண் ராவின் மேலாளர் தயாநிதி உள்பட 7 பேருக்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நாளை ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #IdolTheftCase #IdolWing #RanvirShah
×

X